எம்மைப்பற்றி..

 

யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் உயிர்ப்பு மையமாய், பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட உயர் இலக்குகளின் நிலைக்களனாய் கலைப்பீடம் விளங்குகிறது. நாட்டின் வேறெந்த கலைப்பீடத்திலும் இல்லாதளவிற்கு பரந்த கல்வி வாய்ப்புகளை மாணவர்களுக்குத் தருகின்றது. ஆண்டு தோறும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானோரைக் கலைப்பீடம் அரவணைக்கிது. இன்று 31 பாடநெறிகள் 17 துறைகள் என முழுதளாவிய நிலையில் சமூக விஞ்ஞான, மனித பண்பியல், சட்டம் ஆகிய துறைகளைச் சார்ந்த பட்டநெறிகள் இங்கே வழங்கப்படுகின்றன. பாரம்பரிய அறிவுத்தளத்தோடு தற்கால அணுகுமுறைகள் இசைந்திட எதிர்காலத்துவத்தை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது கலைப்பீடம். இன்று இத்துறை சார்ந்த கற்பித்தல் ஆய்வுச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் நூற்றுக்கும் மெற்பட்ட புலமையாளர்களுடன் இதனையொத்த முதன்மையான பீடங்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டுள்ளது.

எங்கள் உருவாக்கங்களான மாணவர்கள் தேசத்தின் சமூக, அரசியல், நிர்வாக, கல்வியியல், சட்டவியல் என அனைத்து புலங்களிலும் தமது திறமைகளால் தடம்பதித்துள்ளார்கள். சர்வதேச ரீதியிலும் உயரிய மதிப்பினைப் பெறுகிறார்கள். எங்களுக்கான அறிவுலக அங்கீகாரம் மகிழ்சியைத் தருகிறது.

பரீட்சை விண்ணப்பம் தொடர்பானவற்றிற்கு இங்கே அழுத்தவும்

அறிவித்தல்

கலைப்பீட மற்றும் இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டு நடுப்பருவகால விடுமுறை 11-04-2016 தொடக்கம் 15-04-2016 வரையான காலப்பகுதியாகும் எப்பதை அறியத்துகிறோம்

சிரேஸ்ட உதவிப்பதிவாளர்
கலைப்பீடம்சைவமாநாடு

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை நடாத்தும் முதாலவது அனைத்துலக சைவமாநாடு -2015.

விபரங்களுக்கு


Orientation Programme-Bachelor of Law

Orientation programme for the new entrants will be held on 04-01-2016

 


 

 

Copyright 2011 Home. Faculty of Arts, University of Jaffna
Templates Joomla 1.7 by Wordpress themes free