33வது பொதுப் பட்டமளிப்பு வைபவ பட்டமளிப்பு அங்கிகள் வழங்கல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம்  திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்  நடைபெறும்.

இப்பட்டமளிப்பு வைபவத்தில் சமூகமளித்துப் பட்டம் பெறுவோருக்கு கீழ் குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு அங்கிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும்.

பட்டமளிப்பு வைபவத்திற்கான அங்கிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதான பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்தல் வேண்டும்.

திகதி நேரம்பட்டம்
04.12.2017 மு.ப 09.00 – 12.00 பி.ப. 02.00 – 04.00 விவசாயவிஞ்ஞானமாணி

சித்தமருத்துவசத்திரசிகிச்சைமாணி
தாதியியல் விஞ்ஞானமாணி
மருத்துவஆய்வுகூடவிஞஞானமாணி
மருந்தகவியல்மாணி

சட்டமாணி


05.12.2017 மு.ப 09.00 – 12.00 பி.ப. 02.00 – 04.00 தொழில்நிர்வாகமாணி (4 / 3 வருடங்கள்)

வணிகமாணி (4 / 3 வருடங்கள்)
பட்டப்பின்படிப்புபட்டதாரிகள்

பட்டமளிப்பு விழாவின் போது புகைப்படம் மற்றும் பல்திறன் வட்டு (DVD ) இனை எடுப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட புகைப்படப்பிடிப்பாளரிடம் பட்டமளிப்பு அங்கி பெற்றுக்கொள்ளும் தினமன்றே புகைப்படம் மற்றும் பல்திறன் வட்டு (DVD ) பிரதிகளுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பட்டதாரி மாணவர்கள் வேண்டப்படுகின்றனர்.

குறித்த புகைப்படம் மற்றும் பல்திறன் வட்டு (DVD) பிரதிகளுக்கான கட்டண விபரங்களையும் தமக்காக குறித்தொதுக்கப்பட்ட பட்டமளிப்பு அமர்வு விபரங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்  கிளையின் விளம்பர பலகையில் பார்வையிடலாம்.

மேற்குறித்த விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

பதிவாளர்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.