கலைமிடுக்கு சஞ்சிகை வெளியீடு - University of Jaffna

கலைமிடுக்கு சஞ்சிகை வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட (38 அணி)  மாணவர்களால் கலைமிடுக்கு சஞ்சிகை வெளியிடப்பட்டது. இவ் சஞ்சிகையில் 38 அணி மாணவர்களின் ஆக்கங்கள் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை ஆவணப்படுத்தும் நோக்கில் கலைமிடுக்கு சஞ்சிகை உருவாக்கம் பெற்றது.

சஞ்சிகை வெளியீட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக  கலாநிதி க. சுதாகர் பீடாதிபதி கலைப்பீடம் மற்றும் கலாநிதி. சு.ராயுமேஸ் பதில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் அவர்களும் கெளரவ விருத்தினர்களாக பிர்மஸ்ரீ ச.பத்மநாபன் சிரேஸ்ட விரிவுரையாளர் சமஸ்கிருத்துறை இந்துக் கற்றைகள் பீடம்  அவர்களும் எஸ் .பி. எஸ் பபிலராஜ், (செயலாளர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) அவர்களும்,  இ.கிரிசாந்தன்( தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம் )கலந்து சிறப்பித்தனர். இவ் சஞ்சிகைக்கு  மதிப்பீட்டுயுரை சி.சர்வேஸ்வாரா, விரிவுரையாளர் ,கல்வியற்துறை  அவர்கள் நிகழ்த்தினார். இவ் விழாவுக்கு பேராசிரியர்கள்,  முதுநிலை விரிவுரையாளர்கள்,  சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும்  இவ்விழா தே. நிரூதன்  மூன்றாம் வருட பிரதிநிதி  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.