கலாநிதி, முதுமாணி, பட்டப்பின் டிப்ளோமா, இளமாணி, டிப்ளோமா ஆகிய பட்டங்களை அளிப்பதற்காக 2011 ஒக்டோபர் 6ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பட்டமளிப்பு நடைபெறவுள்ளது. பின்வரும் தேர்வுகளில் 2010 ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்பு சித்தியடைந்து பட்டங்கள் பெற தகுதியுடையவர்கள் 2011 செப்டெம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் தமது வேண்டுகோளை அறிவுறுத்தல்களுக்கமைய சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.
01. கலாநிதித் தேர்வு
02. முதுதத்துவமாணித் தேர்வு
03. கல்வியியல் முதுமாணித் தேர்வு
04. பிரதேச திட்டமிடல் முது கலைமாணித்; தேர்வு
05. குடித்தொகை அபிவிருத்தி முதுகலைமாணித் தேர்வு
06. அபிவிருத்தி கற்கை முதுகலைமாணித் தேர்வு
07. பட்டப்பின் கல்வி டிப்ளோமாத் தேர்வு
08. வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணித் தேர்வு
09. சித்தவைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணித் தேர்வு
10. தொழில் நிர்வாகமாணித் தேர்வு
11. வணிகமாணித் தேர்வு
12. சட்டமாணித் தேர்வு
13. மருத்துவ விஞ்ஞானமாணித் தேர்வு
14. விவசாய விஞ்ஞானமாணித் தேர்வு
15. விஞ்ஞானமாணித் தேர்வு (பொது / சிறப்பு)
16. கலைமாணித் தேர்வு (பொது / சிறப்பு)
17. நுண்கலைமாணித் (இசை / நடனம் / சித்திரமும் வடிவமைப்பும்) தேர்வு
18. விஞ்ஞான மாணி (பிரயோக கணிதமும் கணித்தலும்) வவுனியா வளாகம்.
19. விஞ்ஞான மாணி (சுற்றாடல் விஞ்ஞானம்) வவுனியா வளாகம்.
20. வியாபார நிர்வாகமாணி (முகாமை கற்கைகள்) வவுனியா வளாகம்.
21. வியாபார நிர்வாகமாணி (கணக்கியலும் நிதியும்) வவுனியா வளாகம்.
22. விஞ்ஞான டிப்ளோமா தேர்வு (2வருட சாதாரண டிப்ளோமா)
23. வணிக டிப்ளோமாதேர்வு (2வருட சாதாரண டிப்ளோமா)
24. தொழில்நிர்வாக டிப்ளோமா தேர்வு (2வருட சாதாரண டிப்ளோமா)
25. உடற்கல்வி டிப்ளோமா தேர்வு (2வருட சாதாரண டிப்ளோமா)
26. மீன்பிடி விஞ்ஞான டிப்ளோமா தேர்வு (2வருட சாதாரண டிப்ளோமா)
27. இதழியல் டிப்ளோமா தேர்வு (1வருட சாதாரண டிப்ளோமா)
கீழ்வரும் தேர்வுகளுக்கு தோற்றியவர்கள் தேர்வுமுடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு விண்ணப்பிக்கவும்
- விவசாய விஞ்ஞானமாணி
- தாதியியல் விஞ்ஞானமாணி
- மருந்தகவியல்மாணி
- மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி
- பிரதேச திட்டமிடல் முது கலைமாணி
- குடித்தொகை அபிவிருத்தி முதுகலைமாணி
- அபிவிருத்தியியல் முதுகலைமாணி
அறிவுறுத்தல்கள் 1. வேண்டுகோள்படிவங்கள
விண்ணப்பதாரிகள் கீழேகொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை A4 தாளில் தயாரித்தோ அல்லது www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் மூலம் பிரதி செய்தோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. கட்டணங்கள் : (அ) வேண்டுகோள்கட்டணம் ரூபா. 200.00
(ஆ) சான்றிதழ் கட்டணம் ரூபா 350.00
(இ) பட்டதாரி மேலங்கிக்கட்டணம் ரூபா. 50.00
குறிப்பு : பின்வருவோர் வேண்டுகோள் கட்டணமும், பட்டதாரி மேலங்கிக் கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.
- பட்டமளிப்புவைபவத்;திற்கு சமூகமளிக்காது பட்டச்சான்றிதழைப்பெற விரும்பும் பட்டதாரிகள்.
- ஒருவருட அல்லது இரண்டுவருட சாதாரணடிப்ளோமா கற்கைநெறியை
பூர்த்திசெய்தவர்கள்வர்கள்
3. கட்டணம் செலுத்தும் முறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக்கிளையின் கணக்கு இல. 162100160000880 இற்கு சேரக்கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக்கிளையில் கட்டணத்தை செலுத்தவேண்டும். (வங்கிப் பற்றுச் சீட்டில் பெயரையும் மாணவர் பதிவு இலக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்)
பணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டின் மூலப்பிரதி வேண்டுகோள் படிவத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். மேலதிகமான ஒரு போட்டோபிரதியை உங்கள் தேவைக்கு வைத்துக் கொள்ளவும்.
4. பட்டதாரி மேலங்கிகளும் விருந்தினர் நுழைவுச்சீட்டும
நேரடியாக சமூகமளித்து பட்டம் பெறுபவர்களுக்கு ஒரு பட்டதாரி மேலங்கியும் ஒரு விருந்தினர் நுழைவுச்சீட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும்.
5. பல்கலைக்கழக நிலுவைகள்
பல்கலைக்கழகத்திற்கு ஏதாவது நிலுவைகள் அல்லது கொடுப்பனவுகள் செலுத்தப்படாதிருந்தால் அவ் விண்ணப்பதாரிக்கு பட்டமளிப்புச்சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
6. வேண்டுகோள்படிவங்களை சமர்ப்பித்தல்
பூரணப் படுத்தப்பட்ட வேண்டுகோள் படிவத்துடன் பணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை இணைத்து நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமோ கீழ்க்காணும் முகவரிகளுக்கு 05.09.2011 க்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும். (கடித உறையின் இடதுபக்க மூலையில் பட்டம் பெறும் கற்கை நெறியை குறிப்பிடவும்).
- யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்கள்
உதவிப் பதிவாளர்,
அனுமதிகள்; கிளை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
- யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றவர்கள்
சிரேஷ்ட உதவிப் பதிவாளர் / தேர்வுகள்,
வவுனியா வளாகம்,
வவுனியா
வேண்டுகோள் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித்திகதி : 05.09.2011
முடிவு திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறாத வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. மேலதிகவிபரங்களுக்கு உதவிப்பதிவாளர், அனுமதிகள் (தொலைபேசி இல. 021 - 222 6714) உடன் தொடர்பு கொள்ளவுமும்
|