Application Form (Pdf | Doc)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் அ. துரைராசா தங்கப்பதக்கம்

பேராசிரியர் அ. துரைராசா தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு 06.10.2010 க்கு பின்னர் பட்டம் பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமை:- எதிர்வரும் பட்டமளிப்பு வைபவத்தில் பட்டம் பெறவிருக்கும் முதலாம் அல்லது இரண்டாம் (மேற்பிரிவு) வகுப்புக்களில் சித்தியடைந்தவர்கள்.

விண்ணப்பப்படிவங்களை கீழ்காணும் முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

1. சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கல்விக்கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

2. சிரேஷ்ட உதவிப் பதிவாளர், வவுனியா வளாகம், வவுனியா

3. www.jfn.ac.lk இணையத்தளம்

விருதுகள்:- பல்கலைக்கழக மட்டத்தில் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஒரு பதக்கமும், பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக பீடங்களுக்கு ஒவ்வொரு பதக்கமும் வழங்கப்படும்.

முடிவுத் திகதி: 09.09.2011

சரியான, பொருத்தமான தகவல்களை உள்ளடக்காத தெளிவற்றதும் பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவுத் திகதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

பதிவாளர்,