இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சை – கலைப்பீடம்

கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு
(பழைய பாடத்திட்டம்)
மீள்பரீட்சை- 2020

  • மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கலைப்பீட மாணவர்களிடமிருந்து 16/12/2022 திகதி முதல் கலைப்பீடாதிபதி அலுவலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பப்படிவங்களை மாணவர்கள் கலைப்பீட அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது கலைப்பீட இணையத்தளத்திலிருந்து (https://www.arts.jfn.ac.lk) தரவிறக்கம் செய்யலாம்.
  • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 30/12/2022 திகதி வரை கலைப்பீடாதிபதி அலுவலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்க முடியாத மாணவர்கள் “பீடாதிபதி அலுவலகம், கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்” எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க முடியும்.
  • மீள் பரீட்சார்த்திகள் மற்றும் மருத்துவ காரணங்களால் முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றும் அனைவரும் ஒரு பாடஅலகிற்கு மீள் பரீட்சை/பரீட்சை கட்டணமாக ரூபா 250/- வீதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில் செலுத்தி பற்றுச்சீட்டை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.

மக்கள் வங்கிக் கணக்கிலக்கம் : 480000022100084

  • விசேட தேவையுடைய மாணவர்களும், பார்வைக் குறைபாடுடைய மாணவர்களும் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னராக கலைப்பீடப் பிரதிப்பதிவாளரைச் சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத்திகதியின் பின் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்