Admissions – Faculty of Graduate Studies
Published On 15/02/2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
உயர் பட்டப்படிப்புகள் பீடம்
புதிய அனுமதிகள்
மேற்படி சுயநிதிக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் பெறும் முறை:
- மக்கள்வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணம் வைப்பிலிடும் வைப்புச்சீட்டில் குறிப்பிடப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு விண்ணப்பத்திற்கான ரூபா 1000/- கட்டணத்தை செலுத்திய பின் வைப்புச்சீட்டை உயர்பட்டப்படிப்புகள் பீட அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பப் படிவங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
- தபால் மூலம் பெறவிரும்புவோர் நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயருக்கு விண்ணப்பபடிவத்திற்குரிய பெறுமதியான காசுக்கட்டளையுடன் 15/- பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட சுய முகவரியிடப்பட்ட 23 x 10 செ.மீ. அளவுள்ள கடித உறையையும் இணைத்து உதவிப்பதிவாளர், உயர் பட்டப் படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- வலைத்தளம் மூலமாக தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்புபவர்கள் நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயருக்கு ரூபா1000/- பெறுமதியான காசுக்கட்டளையை மக்கள் வங்கியில், குறிப்பிடப்பட்ட கணக்கிலக்கத்திற்கு செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்
- விண்ணப்பங்களை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் கற்கைநெறியின் பெயரினைக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் 28.02.2022 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு உதவிப்பதிவாளர்,உயர்பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
உரிய விண்ணப்பப்படிவங்களில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள், சரியாக பூரணப்படுத்தாத விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 021 222 3608 இற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.
பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்