Aptitude Test – Bachelor of Fine Arts Honours in Music / Dance /Art and Design Degree programmes

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம்

சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி
நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி
சித்திரமும் வடிவமைப்பிலும் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை
கல்வியாண்டு 2021/2022

மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் 2021/2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகைமையை பெற்றுக் கொண்டுள்ள தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2022 தொடக்கம் 21.09.2022 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான தகைமைகள்

கர்நாடகசங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறிகளில் யாதேனுமொன்றைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் தெரிவு செய்யவிரும்பும் பாடநெறிக்குரிய பாடத்தில் அதாவது கர்நாடகசங்கீதம் அல்லது நடனம் – பரதம் அல்லது சித்திரக்கலையில் ஆகக் குறைந்தது திறமைச்சித்தியும் (C), மற்றைய இரண்டு பாடங்களிலும் ஆகக் குறைந்தது சாதாரணதரச் சித்தியும் (S) பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்.

மொழிமூலம் :

  • தமிழ்

மதிப்பீடு செய்யும் முறை

  • கர்நாடகசங்கீதம் –  நடனம் (பரதம்) – ஆற்றுகைப் பரீட்சை
  • சித்திரமும் வடிவமைப்பும் – செய்முறை மற்றும் எழுத்துப்பரீட்சை

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

Apply Here !

விண்ணப்பதாரிகள் www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத் தளம் ஊடாக தத்தமது விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (Online) 21.09.2022 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கப்பட வேண்டும். பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ/த) 2021 பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும் கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்துக்கொள்ளுதல் அவசியமானது.

விண்ணப்பித்த பிரதிகளை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு க.பொ.த உயர்தர பெறுபேற்று பத்திரப் பிரதி மற்றும் கட்டணம் செலத்திய பற்றுச்சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்து உதவிப்பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் வீதி, திருநெல்வேலி எனும் முகவரிக்கு கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘சங்கீதம்/நடனம்/சித்திரமும் வடிவமைப்பும் 2021/2022’ எனக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பித்தல் வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அவர்களினால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

பரீட்சை தொடர்பான அனைத்துத் தகவல்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் அறிவிக்கப்படும்.

பணம் செலுத்தும் முறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கத்திற்குச் சேரக் கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்தி இருத்தல் வேண்டும்.

இல கற்கைநெறி  மக்கள் வங்கிக் கணக்கிலக்கம் விண்ணப்பக் கட்டணம்
1 கர்நாடக சங்கீதம் 040002400001622 1,000.00
2 நடனம்- பரதம் 040002400001630 1,000.00
3 சித்திரமும் வடிவமைப்பும் 040002400001648 2,600.00

மேற்குறிப்பிட்டவாறு விண்ணப்பதாரிகள் தங்கள் பாடங்களிற்கு ஏற்றவாறு பொருத்தமான குறிப்பிலக்கத்தை வங்கிப் பற்றுச் சீட்டில் குறிப்பிடவும். இக் கட்டணத்தினை இணையவழி மூலம் மேற்குறிப்பிட்ட கணக்கிலக்கத்திற்கு வைப்புச் செய்ய முடியாது.

அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராதவையும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாதவையும், க.பொ.த (உயர்தரம்) பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாதவையும்;, விண்ணப்ப முடிவுத்திகதிக்குள் கிடைக்கப்பெறாதவையுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி எண் 021 222 6714 அல்லது மின்னஞ்சல் முகவரி: admissions@univ.jfn.pac.lk மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

 


University of Jaffna, Sri Lanka

Sir Pon Ramanathan Faculty of Performing and Visuals Arts

Aptitude Test for the Selection of candidates for the

Bachelor of Fine Arts Honours in Music / Dance /Art and Design Degree programmes

Academic Year 2021/2022

 

Applications to follow the above Degree Programmes are hereby invited from suitable candidates who possess the minimum university admission requirements for the Academic Year 2021/2022 from 15.09.2022 to 21.09.2022.

Eligibility for Admissions

The candidates who wishes to follow the courses of  Music, Dance and Art & Design should have obtained credit pass (C) in each subject and at least ordinary passes in other two subjects in the Advanced level examination 2021. (University Admission Hand Book Page 36 Section-09)

Method of Evaluation

  • Music, Dance – Performance Test
  • Art & Design – Practical and Aptitude Test

Medium :

Tamil

Submission of Application

Apply Here !

Applicants are hereby requested to apply online through University website www.jfn.ac.lk on or before 21.09.2022. Payment receipt of application fee and photocopy of the G.C.E (A/L) 2021 result sheet certified by the principal of the school  or a Justice of Peace must be attached along with the application.

The downloaded application form signed by the candidate, G.C.E (A/L) 2021 result sheet and the original payment receipt should be sent under registered cover or handed over to Assistant Registrar, Admissions Branch, University of Jaffna, Jaffna, by mentioning “Application for Music/Dance/Art and Design– 2021/2022” in the left hand corner of the envelope.

Eligible candidates will receive the Admission Card only via email. All the relevent information will be updated in the University of Jaffna website.

Payment Method

The application fee may be made at any branch of the Peoples’ Bank in favour of the University of Jaffna collection account. Please note that payments cannot be made via online for this purpose.

No Course Account Number (Reference Number) Application Fee
1 Music 040002400001622 1,000.00
2 Dance 040002400001630 1,000.00
3 Art and Design 040002400001648 2,600.00

 

The applications of those who do not possess the minimum admission requirements, those which do not accompany the paying in voucher, the certified photo copy of G.C.E (A/L) 2021 results sheet or applications received after the closing date will be rejected.

For further details please contact 021 222 6714 or e-mail admissions@univ.jfn.ac.lk.

 

Registrar