வேந்தரின் பேருரைக்கான அழைப்பு
Published On 11/12/2019
34வது பொதுப்பட்டமளிப்பு வைபவம்
வேந்தரின் பேருரைக்கான அழைப்பு
“Distribution of Authority and Co-existence of Ethnic Groups Under Monarchy – The Kandyan Kingdom (C.1474-1815)”
‘முடியாட்சியில் அதிகாரப் பகிர்வும் இனங்களின் சகவாழ்வும் – கண்டி இராச்சியம்-(C.1474-1815)’
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மதிப்பிற்குரிய தகைசார் வேந்தர்
பேராசிரியர். எஸ்.பத்மநாதன் அவர்கள் வழங்கும்
சிறப்புக்கருத்துரை
13.12.2019 (வெள்ளிக்கிழமை)- பி.ப 1.30 மணி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 34வது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும், சேர் பொன் இராமநாதன் நினைவுப் பேருரை மற்றும் சீமாட்டி லீலாவதி நினைவுப் பேருரையைத் தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தரின் பேருரையும் இடம் பெற இருக்கின்றது.
இப்பேருரையானது எதிர்வரும் 13ம் திகதி (வெள்ளிக்கிழமை) – பி.ப 1.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம் பெறும். இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் Distribution of Authority and Co-existence of Ethnic Groups Under Monarchy – The Kandyan Kingdom (C.1474-1815) – முடியாட்சியில் அதிகாரப் பகிர்வும், இனங்களின் சகவாழ்வும்-கண்டி இராச்சியம்-(C.1474-1815) என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக பேராசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் புலைமைசார் மற்றும் ஆய்வு சார் கருத்துக்கள் யாழ்ப்பாண கல்விச்சமூகத்தினருக்கு குறிப்பாக பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினருக்கு மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமையப்பெறுவதனால், மேற்படி சிறப்புக்கருத்துரை வழங்கும் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவாளர்
09.12.2019.
பதிவாளர்
09.12.2019.