Memorial Lecture 2022

Sir. Pon. Ramanathan & Lady Leelawathi Ramanathan Memorial Lectures 2022 held on 10th of October 2022 at Kailasapathy Auditorium, University of Jaffna

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நேற்று 10 ஆம் திகதி, திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றன.
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையில் “யோகா உளவியலும் – மானுடர் வாழ்வும்” என்ற தலைப்பில் முன்னாள் கலைப் பீடாதிபதியும், மெய்யியல் துறையின் முன்னாள் தலைவருமான வாழ் நாள் பேராசிரியர் என். ஞானக்குமரனும், பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகிய சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையில் “சுதேசிய சமூக உருவாக்கம் : பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்த ஓர் உசாவல்” என்ற தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் மொழிகள் துறையைச் சேர்ந்த தமிழ்த்துறை இருக்கைப் பேராசிரியர் எம். ஏ. எம் றமீஸூம் நினைவுப் பேருரையாற்றினர்.
நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசியரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், விரிவுரையாகள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.