வங்கியியலும் நிதியியலும் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
முகாமைத்துவக்கற்கைகள் மற்றும் வணிகபீடம்

வங்கியியலும் நிதியியலும் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023

வங்கியியலும் நிதியியலும் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக்கற்கைகள் வணிகபீடமானது வங்கி மற்றும் நிதித்துறைகளில் இணைய விரும்புவோருக்கு ஆணித்தரமான ஒரு ஆரம்ப அறிவினை வழங்கும் நோக்குடன் முதன் முறையாக வங்கியியலும் நிதியியலும் டிப்ளோமா கற்கைநெறியினை ஆரம்பிக்கின்றது. இக்கற்கைநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும்.

  • கற்கைநெறிக்கான காலம் – ஒருவருடம் (வார இறுதி நாட்கள்)
  • கற்கைநெறி மொழி – தமிழ்
  • விண்ணப்ப தகைமைகள் – க.பொ.த.,உயர்தரப்பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்தி பெற்றிருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30மூ புள்ளிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • ற்கைநெறிக்கான கட்டணம் – ரூபா. 70,000.00

விண்ணப்படிவம் – ரூபா. 1,000.00
பதிவுக் கட்டணம் –  ரூபா.2,000.00
கல்விக் கட்டணம் – ரூபா. 60,000.00
பரீட்சைக் கட்டணம் -ரூபா.  6,000.00
நூலகக்கட்டணம் (திரும்பப்பெறத்தக்கது) – ரூபா. 1,000.00

விண்ணப்படிவத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள

மக்கள் வங்கிக்கிளை கணக்கிலக்கம் (890012700002593) விண்ணப்படிவத்திற்கான கட்டணமாக ரூபா.1,000.00 ஐ செலுத்தி, தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் பற்றுச்சீட்டினை இணைத்து பிரதிப்பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்பல்கலைக்கழகம், திருநெல்வேலி எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படல் வேண்டும். (மாதிரி வைப்புசீட்டினை றறற.உழனட.தகn.யஉ.டம எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்) கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘வங்கியியலும் நிதியியலும் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் – 2022/2023 (அணி -I)’ எனக்குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 15.09.2022

 

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்