News

வேந்தரின் பேருரைக்கான அழைப்பு

35வது பொதுப்பட்டமளிப்பு வைபவம்-2022

வேந்தரின் பேருரைக்கான அழைப்பு

 “கடல்வழி வாணிபமும், வணிகப்போர்களும்
அழகக்கோனாரின் எழுச்சியும்”
“Maritime Trade, Trade Wars and Revival of Dynastic Power
AD 1300-1500”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மதிப்புக்குரிய தகைசார் வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் வழங்கும் சிறப்புக்கருத்துரை

காலம் : 14.03.2022 (திங்கட்கிழமை)- பி.ப 3.30 மணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35வது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் பல்கலைக்கழக வேந்தரின் பேருரை இடம் பெற இருக்கின்றது.

இப்பேருரையானது எதிர்வரும் 14ம் திகதி (திங்கட்கிழமை) – பி.ப 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறும். இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் மதிப்புக்குரிய தகைசார் பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்கள் “கடல்வழி வாணிபமும், வணிகப்போர்களும் அழ கக்கோனாரின் எழுச்சியும்”  என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக பேராசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் புலைமைசார் மற்றும் ஆய்வு சார் கருத்துக்கள் யாழ்ப்பாணக் கல்விச்சமூகத்தினருக்கு குறிப்பாக பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினருக்கு மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமையப்பெறுவதனால், மேற்படி சிறப்புக் கருத்துரை வழங்கும் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு: மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கொவிட் 19 பரம்பல் தடுப்புக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுடன் நிகழ்வில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

துணைவேந்தர்,
யாழ்.பல்கலைக்கழகம்.