Notices

கேள்வி அறிவித்தல் – உணவகங்கள்

கேள்வி அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கீழ்க்காணும் உணவகங்களை நடாத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் பணிமனையில் 01.12.2025 ஆம் திகதி மு.ப 10.00 மணிவரை பொறியிடப்பட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பிரதான உணவகம் I திருநெல்வேலி
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட உணவகம் கலாசாலை வீதி, திருநெல்வேலி
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட உணவகம் கலாசாலை வீதி, திருநெல்வேலி
மருத்துவ பீட உணவகம் திருநெல்வேலி
சித்த மருத்துவ பீட உணவகம் கைதடி
கோண்டாவில் மாணவர் விடுதி உணவகம் கோண்டாவில்
சேர்.பொன்.இராமநாதன் அவைகாற்று மற்றும் காண்பிய பீட உணவகம் திருநெல்வேலி
ஆனந்தகுமாரசுவாமி மாணவர் விடுதி உணவகம் யாழ்ப்பாணம்

மீளளிக்கப்படும் கேள்விவைப்பு பணமாக ரூபா 2,000/=இனை மக்கள் வங்கியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கு இலக்கம் 970000060000268 இற்கும், மீளளிக்கப்படாத கட்டணம் ரூபா 500/=இனை தனித்தனியாக மக்கள் வங்கியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கு இலக்கம் 970000060000276 இற்கும் செலுத்தி பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டுகளினை சமர்ப்பித்து கேள்விப் படிவங்களை இப்பல்கலைக்கழக நலச்சேவைகள் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட கேள்விப் படிவங்களில் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் உணவகத்தின் பெயர் தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.

மேலதிக விபரங்களை அலுவலக நேரங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நலச்சேவைகள் கிளையில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ (தொலைபேசி இல 021 222 6716) பெற்றுக் கொள்ளலாம்.

 

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்