Notices

மாணவர்களுக்கான அறிவித்தல் – நிதியுதவி | JUAA-CANADA

மாணவர்களுக்கான அறிவித்தல் – நிதியுதவி

யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் – கனடா வழங்கும் நிதி உதவி (JUAA-CANADA)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

  • விண்ணப்பப்படிவங்களை நலச்சேவைவைகள் கிளையில் பெற்றுக் கொள்ள முடியும்.
  • விண்ணப்பப்படிவங்களை பல்கலைக்கழக இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்யமுடியும்.
    Application Form
  • Google Link ஊடாக Google Form இனை பெற்றுக்கொள்ள முடியும்.
    Online Application

முக்கிய குறிப்பு: Google Form பூரணப்படுத்துவதுடன், விண்ணப்பப் படிவத்தை நலச்சேவைகள் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டையும் பூரணப்படுத்தியவர்கள் மாத்திரமே உதவித்தொகைக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபப்படிவங்களை நலச்சேவைகள் கிளையில் சமர்பித்தல் வேண்டும் விண்ணப்ப முடிவுத்திகதி 02.06.2025 தகவல்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களும் முடிவுத் திகதிக்கு பின்னர் சமர்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களும் நிராகரிக்கப்படும்.

பின்வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்;படும்.

  • வன்னி மற்றும் மலையக தமிழ் மாணவர்கள்
  • குடும்ப நிலைமையால் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர முடியாதுள்ள மாணவர்கள்
  • பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள்
  • விசேட தேவையுள்ள அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
நலச்சேவைகள் கிளை