Events

தமிழியல் நூலகத் திறப்புவிழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது. தமிழியல் நூலகம் எனப் பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் 29.10.2024 அன்று வைபவரீதியாக வாசகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.