கேள்விப் பத்திரம் கோரல் – பயன்படுத்த முடியாத வீடு மற்றும் பொருட்கள் விற்பனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிறவுண் வீதியில் அமைந்துள்ள பயன்படுத்த முடியாத வீடு மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கான கேள்விப் பத்திரம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிறவுண் வீதியில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள பாவனைக்குதவாத கட்டிடம் மற்றும் பாவித்த கல்வனைசுத் தகரப்பெட்டிகள் என்பவற்றை விற்பனை செய்வதன் மூலம் அகற்றுவதற்கு பொருத்தமான தனி நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படுகின்றன.

எனவே ஆர்வமுள்ள கேள்விதாரர்கள் மீளளிக்கப்படாத கட்டணமாக ரூபா 3,000.00 இனை 970000060000276 என்ற கணக்கிலக்கத்திற்கு நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஏதாவதொரு மக்கள் வங்கி கிளையில் செலுத்தி பெற்ற பற்றுச்சீட்டை 23.06.2023 அன்று 3.00 மணிக்கு முன்னர் உதவிப்பதிவாளர், பொது நிர்வாகம் அவர்களிடம் சமர்ப்பித்து கேள்விப் பத்திரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். கட்டடம் மற்றும் பொருட்களைப் பார்வையிடவிரும்பும் கேள்விதார்கள் மீளளிக்கப்படாத கட்டணத்தைச் செலுத்திய பற்றுச்சீட்டுடன் 021-222 6516 என்ற தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு பார்வையிட முடியும்.

மேலும் பூரணப்படுத்தப்பட்ட கேள்விப்பத்திரத்துடன் மீளளிப்பு செய்யப்படக்கூடிய தொகையான ரூபா.100,000.00 இனை எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் 970000440002612 என்ற கணக்கிலக்கத்திற்கு நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் வைப்புச் செய்த பற்றுச்சீட்டினையும் இணைத்து எதிர்வரும் 30.06.2023 பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாகப் பதிவுத்தபாலில் தலைவர், கேள்விச்சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரடியாகச் சமர்ப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த காலவரையறைக்குள் பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் கேள்விப் பத்திரங்களை இடலாம். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “பல்கலைக்கழக பிறவுண் வீதியில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள பாவனைக்குதவாத கட்டிடம் மற்றும் பாவித்த கல்வனைசு தகரப்பெட்டிகள் என்பவற்றுக்கான கேள்விப்பத்திரம்” என குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். மீளளிப்பு செய்யப்படக்கூடிய தொகையான ரூபா.100,000.00 ஐ செலுத்தாத கேள்விதாரர்களின் கேள்விகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கேள்விப் பத்திரங்கள் 30.06.2023 பிற்பகல் 2.30 மணிக்கு திறக்கப்படும். மனுதாரர்கள் அல்லது அவர்களில் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள் அன்றையதினம் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் இடத்திற்கு சமுகமளிக்கலாம்.

 

தலைவர்
கேள்விச்சபை