உளச்சார்பு பரீட்சை – கலைப்பீடம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
பல்கலைக்கழக அனுமதி 2020/2021
கலைப்பீடம்
உளச்சார்பு பரீட்சை (Aptitude Test)

  • நுண்கலைமாணி – கர்நாடகசங்கீதம்
  • நுண்கலைமாணி – நடனம்
  • நுண்கலைமாணி – சித்திரமும் வடிவமைப்பும்
  • மொழிபெயர்ப்புக் கற்கைநெறியில் கலைமாணி (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

மேற்படி நான்கு வருடப் பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 11.06.2021 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

பரீட்சைக் கட்டணத்தினை மேற்கொண்ட பற்றுச்சீட்டு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியினை நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தில் இணைத்துக் கொள்ளாத விண்ணப்பதாரிகள் 11.06.2021 ஆம் திகதிக்கு முன்னர் தவறாது ar.admissions@yahoo.com எனும் முகவரிக்கு அல்லது நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்நிலையில் பெற்றுக்கொண்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றினை உறுதிப்படுத்தும் ஆவணம் (Online A/L Result Sheet) ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி கற்கைநெறிகளுக்கான பரீட்சைகள் தொடர்பான விபரங்கள் தங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல், பல்கலைக்கழக இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாக அறிவிக்கப்படும்.

எல்லா விண்ணப்பதாரிகளும் ar.admissions@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுப்பெயரினைக் குறிப்பிட்டு தங்களது அண்மைக்கால புகைப்படத்தினை தவறாது (Recent Photograph) அனுப்பி வைத்தல் வேண்டும்.

பதிவாளர்
09.06.2021