உளச்சார்பு பரீட்சை (Aptitude Test) விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
Published On 27/05/2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
பல்கலைக்கழக அனுமதி 2020/2021
கலைப்பீடம்
உளச்சார்பு பரீட்சை (Aptitude Test)
நுண்கலைமாணி – கர்நாடகசங்கீதம்
நுண்கலைமாணி – நடனம்
நுண்கலைமாணி – சித்திரமும் வடிவமைப்பும்
மொழிபெயர்ப்புக் கற்கைநெறியில் கலைமாணி (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
மேற்படி நான்கு வருடப் பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக் கட்டணத்தினை மேற்கொண்ட பற்றுச்சீட்டு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியினை நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தில் இணைத்துக் கொள்ள இயலாத விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும்.
ஆயினும், விண்ணப்பத்தினை ஏற்றுக் கொள்ளும் இறுதித்திகதிக்கு முன்னர் இவ் இரு ஆவணங்களையும் நேரிலோ அல்லது ar.admissions@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். நிகழ்நிலையில் பெற்றுக்கொண்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றினை உறுதிப்படுத்தும் ஆவணம் (Online A/L Result Sheet) ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித்திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
பதிவாளர்
27.05.2021