2016/2017 கல்வியாண்டு கலைப் பீட மாணவர்களுக்கான அறிவித்தல்.

விசேட அனுமதியின் கீழ் கலைமாணி பட்டப்படிப்பைத் தொடர்வதற்காகத் தொடரிணை (online) மூலம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவில் தமது பதிவினை மேற்கொண்ட மாணவர்களுக்கான பிரத்தியேக கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள் தம்மைப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கை செய்து கொள்வதற்காக எதிர்வரும் 03.08.2018 வெள்ளிக்கிழமை அனுமதிகள் கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.

இம்மாணவர்கள் கீழே குறிப்பிடப்படும் ஆவணங்களை முன்னரே பெற்று அதனை உரிய முறையில் பூர்த்தி செய்து தம்முடன் எடுத்து வருவதன் மூலம்  மாணவர்கள் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

 1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம்
 2. மாணவர் தகவல்  படிவம் [பதிவிறக்க]
 3. பல்கலைக் கழக பதிவுக் கட்டணமும் ஏனைய கட்டணங்களும் வங்கியில் செலுத்தியமைக்காக வங்கியால் வழங்கப்பட்ட  ரூபாய்கள்  2350.00 /= க்கான  பற்றுச்சீட்டுப் பிரதி.  [பதிவிறக்க]
 4. ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
 5. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் உண்மைப் பிரதியுடன் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவான் அல்லது கிராமசேவகரால் சான்றுப் படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி
 6. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் உண்மைப் பிரதியுடன் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவான் அல்லது கிராமசேவகரால் சான்றுப் படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
 7. பாடசாலை விடுகைப் பத்திரத்தின் உண்மைப் பிரதி.
 8. பெயர் மாற்றம் சம்பந்தமான சட்ட ரீதியான வலுவுள்ள  சான்றிதழ் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் ( இருப்பின் )
 9. பல்கலைக்கழகம் / வளாகம் / நிறுவகம் ஆகிய ஏதாவதொன்றில் முன்னர் பதிவினை மேற்கொண்டிருப்பின் அந்தப் பதிவினை இரத்துச் செய்தமைக்கான ஆவணம்.
 10. பகிடிவதை மற்றும் வேறு வடிவத்திலான வன்முறை, குற்றச் செயல் எதிலும் ஈடுபடமாட்டேன் என்று பாடசாலை அதிபர் அல்லது கிராமசேவகரால் சான்றுப் படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
 11. புதிய கடவுச் சீட்டுக்குப் பாவிக்கப்படுவதற்கெனச் சிபார்சு செய்யப்பட்டுள்ள 5 சென்ரிமீற்றர் நீளமும் , 4  சென்ரிமீற்றர் அகலமும் உடைய 10 வர்ண நிழற் படப் பிரதிகள். (இவற்றில் மூன்று நிழற் படப் பிரதிகள் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவான் அல்லது கிராமசேவகரால் சான்றுப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.)
 12. பல்கலைக் கழக மாணவர் அடையாள அட்டை பெறுவதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
 13. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் உண்மைப் பிரதியுடன் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவான் அல்லது கிராமசேவகரால் சான்றுப் படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.