கலைமாணிப் பட்டப்படிப்பு- 2020/2021
Published On 19/01/2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள்
க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் அங்கீரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் 2020 அல்லது அதற்கு முன்னர் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் 30% இற்கு குறையாத புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள் அல்லது NVQ Level-04, டிப்ளோமாக்கள், மொழி டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள் அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தொடர்புடைய மற்றும் சமமானது என கருதப்படவல்ல தகைமைகளைக் கொண்டவர்கள்.
மாணவர் தெரிவு
விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை மூலமாகவோ அல்லது அவ்விரண்டினதும் மூலமாகவோ தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்ப முடிவுத்திகதி: 20.02.2024
விண்ணப்பம் செய்யும் முறை
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் (
Application form ) பதிவினை மேற் கொள்ள முடியும். எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும்
890032340002142 எனும் வங்கி கணக்கிலக்கத்திற்கு விண்ணப்பக் கட்டணமாக 1,000.00 ரூபாவினை செலுத்தி அதன் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை இணையத்தள முகவரியில் பதிவேற்றம் செய்வதோடு விண்ணப்பத்தின் மூலப்பிரதியை நேரடியாக அல்லது தபால் மூலமாக சமர்ப்பித்தல் வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பபடிவங்களின் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘கலைமாணிப் பட்டப்படிப்பு- 2020/2021’ எனக்குறிப்பிட்டு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.
பின்வரும் காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்:
- அனுமதிக்கான தகைமைகளினை விண்ணப்பதாரி கொண்டிருக்கத் தவறுதல்/ தகைமைகளினை முறையாக படிவத்தில் பூரணப்படுத்தத் தவறுதல்.
- விண்ணப்பப்படிவத்தினை மேற்கண்ட இணையத்தளத்தில் முறையாக தரவேற்றம் செய்யத் தவறுதல்/ விண்ணப்பப்படிவத்தின் மூலப்பிரதியினை நேரடியாக/ தபால் மூலம் சமர்ப்பிக்காது தவறுதல்.
- விண்ணப்பக் கட்டணமான 1,000.00 ரூபாவினை செலுத்தத் தவறுதல் அல்லது அதன் மூலப்பிரதியினை இணைக்காது சமர்ப்பித்தல்/ அதனைத் தரவேற்றம் செய்யத் தவறுதல்.
- விண்ணப்ப முடிவுத்திகதியான 20.02.2024ற்கு பின்னர் சமர்ப்பித்தல்.
மேலதிக விபரங்களுக்கு
www.codl.jfn.ac.lk அல்லது 021 222 3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.
பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.