Bachelor of Arts (Honors) in Translation Studies (Tamil and English)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

பல்கலைக்கழக அனுமதி 2019 / 2020

உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

இளங் கலைமாணி மொழிபெயர்ப்புக் கற்கைநெறி (கௌரவ)
(தமிழ் மற்றும் ஆங்கிலம்)

மேற்படி நான்கு வருட பட்டப்படிப்புக் கற்கை நெறிக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 05.07.2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்

இளங் கலைமாணி மொழிபெயர்ப்புக் கற்கைநெறி (கௌரவ) யைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் எப் பிரிவில் தோற்றியவர்களும் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

உளச்சார்புப் பரீட்சை

மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலமொழித் திறமையைப் பரீட்சித்தல் என்ற இலக்கினை அடிப்படையாகவுள்ள பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும். பரீட்சைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களில் நடாத்தப்படவுள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பதாரிகள் www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத் தளம் ஊடாக தத்தமது விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் ( Online) விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர், விண்ணப்பித்த பிரதிகளை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க

மேற்படி தகுதிகாண் பரீட்சைக்கான விண்ணப்பத்துடன் ரூபா 500.00 ஐ ஏதாவதொரு மக்கள் வங்கிக் கிளையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளை, கணக்கு இலக்கம் 162 100 160 000 880 இல் செலுத்திப் பெற்ற பற்றுச் சீட்டுடன் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ/த) 2019 பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும் அனுப்பப்படல் வேண்டும். பரீட்சைப் பெறுபேற்றில் அல்லது பெயரில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அதற்குரிய சத்தியக் கடதாசி சமர்ப்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படல் வேண்டும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் 05.07.2020 வரை பிரதிப் பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் ‘மொழிபெயர்ப்புக் கற்கை நெறி 2019/2020’ எனக் குறிப்பிட்டு பதிவுத் தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அனுமதிக்குரிய ஆகக் குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச் சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்றுப் பத்திரத்தின் உறுதி செய்யப்பட்ட போட்டோப் பிரதிகள் இணைக்கப்படாததும், விண்ணப்ப முடிவுத் திகதிக்குள் கிடைக்கப் பெறாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.

பிரவேச அனுமதித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளின் பெயர்கள் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.

ஆகவே தெரிவுசெய்யப்படும் விண்ப்பதாரிகள் தத்தமது பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் மூலம் கிடைப்பதில் தாமதம் ஏற்படின் அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்துக்கு சமூகமளித்து தற்காலிக அனுமதி அட்டையைப் பெற்று பரீட்சைக்குத் தோற்றமுடியும் என்பதைத் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.

இவற்றிற்குரிய பரீட்சைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 021 222 6714.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


Bachelor of Arts (Honors) in  Translation Studies.
(Tamil and English)

Applications to sit for the Aptitude Test to follow the above four years Special Degree program  

Applications are hereby invited from suitable candidates those who possess the minimum university admission requirements for the academic year 2019 / 2020 upto  05.07.2020.

Eligibility for admissions

The candidate who wishes to follow the course of Bachelor of Arts (Honors) in Translation Studies should have obtained minimum requirements for admissions in accordance with the University Admission Hand Book   for the Academic year 2019 / 2020. Accordingly at least three “S” grades in any subject stream at the G.C.E (A/L) exam 2019.

Aptitude Test

One who applies for university admission should sit for an aptitude test on Language proficiency both  in Tamil and English to be conducted by the University of Jaffna.  The aptitute test would be conducted in two centres at Univerity of  Jaffna and at Eastern University, Batticaloa.

Submission of Application

Applicants are hereby requested to send the online application form along with relevant documents, through the University of Jaffna  web site www.jfn.ac.lk.

Apply Online Registration Here
Printed application should accompany with a paying in voucher obtained from any branch of the Peoples Bank for Rs.500/= drawn in favour  of the University of Jaffna Account No 162 100 160 000 880 being the fee for the particular test, (Cheques or postal orders will not be accepted) along with certified photocopy of the G.C.E(A/L) 2019 result sheet by the Principal of the school  or a Justice of Peace.

Applicants are requested to send the hard copy of the application by Post” “or “by hand” in addition of sending the online application form and other documents for a safety measure. Anyhow the online application is must.

The application should  be sent under registered cover to reach the Deputy Registrar / Admissions, University of Jaffna, Jaffna on or before  05.07.2020  at 11.00pm. following tittled shoud be written “Application for Translation Studies Degree Programme 2019/2020” on the top left hand corner of the envelope.

The Applications of those who do not possess the minimum admission requirements, those which do not accompany the paying in voucher which do not annex the certified photo copy of G.C.E(A/L) 2019 results or applications received after closing date will be rejected. Admission cards for the Aptitude test will be sent to the eligible applicants. For further details please contact 021 222 6714.

Registrar,
University of Jaffna.