வெளிவாரிப் பரீட்சைகள் – வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்

வெளிவாரிப் பரீட்சைகள்

வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி

  • இரண்டாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2020
  • மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2020

மேற்படி பரீட்சைகளினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் யூலை மாதமளவில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திலோ அல்லது www.codl.jfn.ac.lk எனும் இணையத்தள முகவரியிலோ விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி பரீட்சைகளுக்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 03.06.2022 (வெள்ளிக்கிழமை) ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களினை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் (காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை) சமர்ப்பிக்கலாம். பதிவுத் தபால் மூலம் அனுப்ப விரும்புவோர் கீழ்த் தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

பிரதிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் 021-222-3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

 

பதிவாளர்
17.05.2022