பகிரங்க ஏலவிற்பனை அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பகிரங்க ஏலவிற்பனை அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பின்வரும் இடங்களில் காணப்படும் பாவனையில் இல்லாத அலுவலக தளபாடங்கள், கணனி உபகரணப்பொருட்கள் மற்றும் பாவிக்கமுடியாத/பாவனைக்குத் தேவைப்படாத பொருட்களை பகிரங்க ஏலவிற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள ஏலதாரர்கள் ஏலவிற்பனைக்குரிய பொருட்கள் தொடர்பான விபரங்களை பல்கலைக்கழக பொதுநிர்வாகக்கிளையுடன் தொடர்புகொண்டு பின்வரும் தினங்களில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 02.00 மணிவரை குறித்த நாட்களில் பார்வையிடலாம்.

ஏலவிற்பனை நடைபெறும் இடம்

 

இல

 

ஏலவிற்பனை நடைபெறும் இடம்

 

ஏலப்பொருட்கள்

ஏலப்பொருட்களை பார்வையிடும் நாட்கள் ஏலவிற்பனை நடைபெறும் திகதி / காலம்

01

பல்கலைக்கழக பிரதான வளாகம்
  • கணனி உபகரணப் பொருட்கள்
  • தளபாடங்கள்
  • ஆய்வுகூடப்பொருட்கள்
  • அலுவலக உபகரணங்கள்
22.09.2022

23.09.2022

28.09.2022
புதன்கிழமை
மு.ப. 10.00 மணி

ஏலவிற்பனையில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் அனுமதிக் கட்டணமாக ரூபா 2,000.00ஐ பல்கலைக்கழக காசாளரிடம் அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில் 970000440001846 என்ற கணக்கிலக்கத்திற்கு நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், என்ற பெயரில் வைப்புச்செய்த பற்றுச்சீட்டுடன் உரிய விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பித்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஏலப்பொருட்களை பார்வையிடுவதுடன் ஏலத்திலும் கலந்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதாரர்கள் பொருட்களைப் பார்வையிட்ட பின்னர் மீளளிப்பு செய்யக்கூடிய வைப்புத் தொகையாக ரூபா 15,000.00 ஐ 970000440002612 என்ற கணக்கிலக்கத்திற்கு வைப்புச் செய்து செலுத்திய பற்றுச்சீட்டினை 23.09.2022 மாலை 4.00 மணிக்கு முன்னர் நிர்வாகக்கிளையில் சமர்ப்பிப்பதன் மூலம் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் 29.08.2022 அன்று நடைபெற்ற ஏலவிற்பனைக்காக மீளளிப்புச் செய்யக்கூடிய தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை இம்முறை மீளளிப்புச்செய்யக்கூடிய தொகையாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். இருப்பினும் அனுமதிக்கட்டணமான 2,000.00 ஐ செலுத்துதல் வேண்டும்.

மேற்காட்டிய திகதியில் நடைபெறும் ஏலவிற்பனையில் வெற்றியடைந்தவர்கள் ஏலத்திற்குரிய தொகையினை பணமாகச் உடன் செலுத்தி பொருட்களை முழுமையாக உடன் எடுத்துச்செல்லுதல் வேண்டும்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்