திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய 36வது பொதுப்பட்டமளிப்பு விழா – 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.

36வது பொதுப்பட்டமளிப்பு விழா – 2022

யாழ்.பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கும் முகமாக பொதுப்பட்டமளிப்பு விழாவினை 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 08ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வியாபார முகாமைத்துவமாணி, வணிகமாணி ஆகிய பட்டக் கற்கைநெறிகளில் 28.03.2021 இற்கு பின்பும் 01.08.2022 திகதிக்கு முன்பும் சித்தியடைந்த மாணவர்களுக்கே மேற்படி பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதால், தகுதி உடைய மாணவர்கள் 19.09.2022 (திங்கட்கிழமை) இற்கு முன்னதாக அவரவருக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டினையும் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டுகோள் படிவத்தினையும் (Supplication Form) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரியினூடாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டின் மூலப்பிரதி பட்டமேலங்கியினை பெற்றுக்கொள்ளும் போது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்)

  • வேண்டுகோள் படிவங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய இணைய இணைப்பு : https://bit.ly/3KJ4Eyu

கட்டணம் மற்றும் வங்கிக்கணக்கிலக்க விபரம்

பட்டமளிப்பு விழா மொத்தக்கட்;டணம் ரூபா.4,000.00 ஆகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மக்கள் வங்கி கணக்கிலக்கத்திற்குச் சேரக் கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வங்கிப் பற்றுச் சீட்டில் பெயரையும் மாணவர் பதிவு இலக்கத்தையும் தெளிவாகக் குறிப்பிடவும்.

  • மக்கள் வங்கிக்கணக்கிலக்கம் : 890002460001794

மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 021 222 3612 என்ற தொலைபேசி எண்ணூடாக அல்லது mdlcrd@univ.jfn.ac.lk தொடர்புகொள்ளலாம்.

 

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
06.09.2022