வெளிவாரிப் பரீட்சைகள் மற்றும் துரிதமீட்டல் வகுப்புக்கள் – 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்

வெளிவாரிப் பரீட்சைகள் மற்றும் துரிதமீட்டல் வகுப்புக்கள் – 2022

  • கலை முதற் தேர்வு – 2022 (பழைய பாடத்திட்டம்) (இறுதிச் சந்தர்ப்பம்)
  • வணிக முதற் தேர்வு – 2022(பழைய பாடத்திட்டம்) (இறுதிச் சந்தர்ப்பம்)
  • வணிக முதற் தேர்வு – 2022(புதிய பாடத்திட்டம்) (இறுதிச் சந்தர்ப்பம்)
  • இசைமாணி / நடனமாணி முதலாம் வருடத் தேர்வு – 2022 (இறுதிச் சந்தர்ப்பம்)

மேற்படி பரீட்சைகளுக்கான துரிதமீட்டல் வகுப்புக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் மே மாத இறுதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திலோ அல்லது www.codl.jfn.ac.lk எனும் இணையத்தள முகவரியிலோ விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பரீட்சார்த்திகள் தோற்றும் பாட அலகொன்றிற்காக செலுத்த வேண்டிய கட்டணம் ரூபா 2,500.00 இனை மக்கள் வங்கி கணக்கிலக்கம் 890002340002319 இல் செலுத்தி பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.

மேற்படி பரீட்சைகளுக்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 22.05.2022 (ஞாயிற்றுக்கிழமை). மேலும் பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் விபரங்கள் பின்னர், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக அறியத்தரப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களினை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் (காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

பதிவுத் தபால் மூலம் அனுப்ப விரும்புவோர் கீழ்த் தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

பிரதிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் 021-222-3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

 

பதிவாளர்
17.05.2022