நேர்முகப் பரீட்சை: பட்டப்பின் கல்வியியல் டிப்ளோமா

பட்டப்பின் கல்வியியல் டிப்ளோமா
பாடநெறி(முழு நேரம்)2020/2021

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில், மேற்படி கற்கைநெறியினை பயில்வதற்காக கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுள் இதுவரை நேர்முகப் பரீட்சையில் தோற்றாத மாணவர்கள் 30-12-2021 அன்று காலை 9.30 மணிக்கு கலைப்பீட சபையறையில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சையில் தோற்றுமாறு வேண்டப்படுகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவதற்கான அனுமதியினை பெற்ற மாணவர்கள் அதற்காக கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட கடிதத்தினை நேர்முகப் பரீட்சைக்கு கொண்டு வருதல் வேண்டும்.

மேலும் கலைப்பீட பீடாதிபதி அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு (021–222 3091) நேர்முகப்பரீட்சைக்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.