கேள்வி விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இராமநாதன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

பேரூந்து, வான், முச்சக்கரவண்டி மற்றும் சிறியவகை காவுவண்டி, (Mini Truck) போன்ற வாகனங்களை கல்விசார் மற்றும் அலுவலக தேவைகளுக்காக அழைப்பின் பேரில் (Oncall) அல்லது வாடகை (Hiring) அடிப்படையில் வழங்குவதற்கான கேள்வி விண்ணப்பம் கோரல் (Invitation for Bid) -2023-2024

தவிசாளர், கொள்வனவுக் குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மற்றும் அறிவியல்நகர் கிளிநொச்சி வளாகம் ஆகியவற்றின் அலுவலக மற்றும் கல்விசார் செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றுவதற்காக பின்வரும் வாகனங்களை அழைப்பின் பேரில் (Oncall) அல்லது வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு தகுதிவாய்ந்த கம்பனிகள், அல்லது தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்ப்டுகின்றன.

தொ.இல வாகனங்களின் வகை ஆசனங்களின் எண்ணிக்கை தேவையான வாகனங்கள் தேவைப்படும் இடங்கள்
1.1 பிரயாணிகள் வான் /Passenger Van 10-16 05 யாழ்/ கிளிநொச்சி
1.2 பிரயாணிகள் வான் /Passenger Van 08-10 05 யாழ்/ கிளிநொச்சி
1.3 பிரயாணிகள் பேருந்து /Passenger Bus 42-54 05 யாழ்/ கிளிநொச்சி
1.4 சிறியவகை காவுவண்டி /Mini Truck 1500 – 2500 kg 02 02 யாழ்/ கிளிநொச்சி
1.5 முச்சக்கரவண்டி / Three wheeler 03 01 கிளிநொச்சி

விண்ணப்பிக்க தகுதியுடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக கேள்வி விண்ணப்பங்களை மே மாதம் பதினைந்து (15) ஆம் திகதி பி.ப 02.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

 • சேவை ஒப்பந்தக்காலம் ஒரு (01) வருடத்தினையும் செயற்றிறன் மதிப்பீட்டுக்காலம் அறுபது (60) நாட்களையும் கொண்டிருக்கும்.
 • வாகன முற்பதிவானது 2012ம் ஆண்டிற்கு பிற்பட்டதாக இருத்தல் வேண்டும்.
 • வாகனங்கள் சேவை வழங்கும் நாட்களில் அதன் கிலோமீற்றர், மற்றும் நேரம் ஆகியவற்றின் பதிவுகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் சார்பில் உதவிப்பதிவாளர்,பொதுநிர்வாகம் அவர்களால் அல்லது அவரது பிரதிநிதி ஒருவரால், மேற்பார்வை செய்யப்படும்.
 • பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் தேவைக்கான வாகனமாயின் பிரதானவளாகத்தில் இருந்தும் அறிவியல் நகர் கிளிநொச்சி வளாகத்தின் தேவைக்கான வாகனமாயின் அறிவியல் நகர் கிளிநொச்சி வளாகத்தில் இருந்து கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.
 • நிறுவனம் அல்லது தனிநபர் பின்வரும் அடிப்படைத் தகைமைகளை கொண்டிருத்தல் அவசியமானது
  1. பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்லது தனிநபர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
  2. தகுதியுடைய விண்ணப்பதாரிகளின் வாகனம் அவரது பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ப்பட்டு இருத்தல் வேண்டும்.
  3. குறைந்தது மூன்று (03) வருடங்கள் வாடகை வாகன சேவையை வழங்கிய அனுபவம் உள்ள நிறுவனமாக அல்லது தனிநபராக இருத்தல் வேண்டும்.
  4. வருடாந்த வருமானம் கடந்த மூன்று (03) வருடங்களில் குறித்த ரூபாயினை குறைந்த வருமானமாக ஈட்டியிருத்தல் வேண்டும்.
   1.1 பிரயாணிகள் வான், /Passenger Van (12 – 16 இருக்கைகள்) ரூ 500.000.00
   1.2 பிரயாணிகள் பேருந்து /Passenger Van (08 – 10 இருக்கைகள்) ரூ 500.000.00
   1.3 பிரயாணிகள் பேருந்து /Passenger Bus ( 45 – 10 இருக்கைகள்) ரூ 500.000.00
   1.4 சிறியவகை காவுவண்டி //Mini Truck 1500 – 2500 Kg (02 இருக்கைகள்) ரூ 500.000.00
   1.5 முச்சக்கரவண்டி / Three wheeler (03 இருக்கைகள்) ரூ 100.000.00
  5. குறைந்தது ஐந்து வருட அனுபவமுள்ள நற்பண்புடைய சாரதிகள் கடமைக்கு அமர்த்தப்படல் வேண்டும்.
 • கேள்வி விண்ணப்பங்கள் யாவும் தொழில்நுட்பத் தேவைகள், மற்றும் வணிகத்தேவைகளை உள்ளடக்கியதாக இருத்தல்வேண்டும் அத்துடன் அவற்றிற்கான உரிய சான்றுகள், மற்றும் ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
 • கேள்வி மனுவிற்கான பாதுகாப்பு (Bid Security) வைப்புப்பணமாக ரூபா 15,000.00 இனை இலங்கை மத்திய வங்கியால் அனுமதி வழங்கப்பட்ட யாதேனும் ஒரு வணிக வங்கியிடமிருந்து 12.09.2023 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் (120 நாட்கள்) காலத்தை உடைய பாதுகாப்புப் வைப்புச் சான்றிதழ் ஒன்றை இணைத்தல் அவசியமானது. மாறாக, காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
 • முழுமையான கேள்வி விண்ணப்பத்தினை தமிழ் மொழியில் கொள்வனவு செய்வதற்கு விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூபா 3,000. 00 நிதியாளர் யாழ்பாணப் பல்கலைக்கழகம் என்ற பெயரில், மக்கள் வங்கி 970000060000276 கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்தல் வேண்டும். அல்லது காசாளரிடம் செலுத்திய பற்றுச்சீட்டை சமர்ப்பித்து உதவிப்பதிவாணர் பொதுநிர்வாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
 • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் கேள்வி மனுவிற்கான பாதுகாப்புப் பணப் பத்திரம் (Bid security Certificate) மற்றும், விண்ணப்பச் செயலாக்கப் பணப் பற்றுச்சீடு (Application Processing fees) என்பன இணைத்து அனுப்புதல் வேண்டும், மேற்குறித் பத்திரங்கள் இணைக்கப்படாத, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
 • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மூலஆவணம் (Original), பிரதி (Duplicate) என்று தனித்தனியாக பொதியிட்டு அக் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘அழைப்பின் பெயரில் (On Call) / வாடகை (Hiring) அடிப்படையில் வாகனம் வழங்குதல் – 2023 – 2024’ எனத் தலைப்பிட்டு தவிசாளர், கேள்விச்சபை, த.பெ.இ- 57, திருநெல்வேலி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் 15.05.2023 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைத்தல் அல்லது கையளித்தல் வேண்;டும்.

ஏலத் திறப்பு (Bid Opening)

 • திகதி:- 15.05.2023
 • நேரம்:- 02:00 pm
 • இடம்:- பிரதான சபா மண்டபம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 • ஏலம் திறக்கப்பட்டு முதல் விலை ஏலங்கள் மதிப்பிடப்படும் பின்னர் தொழில் நுட்ப ரீதியில் ஏலங்கள் மதிப்பிடப்படும்.
 • ஏலம் திறக்கப்படும்போது ஏலதாரர் அல்லது அவர் சார்பிரதிநிதிகளில் ஒருவர் சமூகமளித்தல் வேண்டும்

மேலதிக தகவல்களுக்கு: உதவிப்பதிவாளர்/ பொதுநிர்வாகக் கிளை – Tele: 021 222 6517, Fax:- 021 222 6517.


தலைவர்,

கேள்விச்சபை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.