பட்டமளிப்பு அங்கிகளை பெற்றுக் கொள்ளல் -32வது பொது பட்டமளிப்பு வைபவம்
Published On 03/01/2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
32வது பொது பட்டமளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும்.
இப்பட்டமளிப்பு வைபவத்தில் நேரடியாகப் பட்டம் பெறுவோருக்கு கீழ்குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு அங்கிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும். பட்டமளிப்பு வைபவத்திற்கான அங்கிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதான பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையினை காண்பித்தல் வேண்டும்.
பட்டமளிப்பு விழாவின்போது புகைப்படம் மற்றும் DVD யினை எடுப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட புகைப்படப்பிடிப்பாளரிடம் பட்டமளிப்பு அங்கி பெற்றுக்கொள்ளும் தினமன்றே புகைப்படம் மற்றும் DVD பிரதிகளுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பட்டதாரி மாணவர்கள் வேண்டப்படுகின்றனர். குறித்த புகைப்படம் மற்றும் DVD பிரதிகளுக்கான கட்டண விபரங்களையும் தமக்காக குறித்தொதுக்கப்பட்ட பட்டமளிப்பு அமர்வு விபரங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையின் விளம்பரப் பலகையில் பார்வையிடலாம். மேற்குறித்த விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்திலும் பார்வையிடலாம். முகவரி www.jfn.ac.lk.
பட்டமளிப்பு அங்கிகளைப் பெற்றுக் கொள்ளுதல்
Date | Time | Degrees to be Awarded |
04.01.2017
புதன்கிழமை | மு. ப. 09.00 – 12.00
பி. ப. 02.00 – 04.00 | விவசாய விஞ்ஞானமாணி
சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணி
மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணி
தாதியியல் விஞ்ஞானமாணி
மருத்துவ ஆய்வுகூட விஞ்;ஞானமாணி
மருந்தகவியல்மாணி
கலைமாணி(சிறப்பு) சட்டமாணி |
05.01.2017
வியாழக்கிழமை | மு. ப. 09.00 – 12.00
பி. ப. 02.00 – 04.00 | கலைமாணி(பொது)
நுண்கலைமாணி(சங்கீதம் நடனம் சித்திரமும் வடிவமைப்பும்)
தொழில்நிர்வாகமாணி
வணிகமாணி(3 வருடங்கள்)
விஞ்ஞானமாணி(சிறப்பு பொது)
கணணி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
|
06.01.2017
வெள்ளிக்கிழமை | மு. ப. 09.00 – 12.00
பி. ப. 02.00 – 04.00 | பட்டப்பின் படிப்பு பட்டதாரிகள் |
பட்டமளிப்பு அங்கிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
Date | Time | Infront of Admission Branch | Infront of Academic Branch | Internal Quality Assurance Unit / Near Internal Audit Branch |
04/01/2017 (Wednesday) | a.m 09.00 – 12.00 p.m
p.m 02.00 – 04.00p.m | B.Sc in Agriculture,BSMS | MBBS, B.Sc in MLT , B.Sc in Nursing, B.Pharmacy | B.A(Special),B.Laws |
05/01/2017 (Thursday) | a.m 09.00 – 12.00 p.m
p.m 02.00 – 04.00p.m | B.B.A, B.Com(3years) | B.Sc in Comp. Sc., B.Sc in Appli.Sc.,B.Sc (Gen&Sp.),B.Comp. Sc. | B.A(Gen), B.F.A(Dance,Music,Art&Design) |
06/01/2017 (Friday) | a.m 09.00 – 12.00 p.m
p.m 02.00 – 04.00 p.m | Academic Staff, Administrative Staff | Academic Staff, Administrative Staff | Ph.D,M.Phil,M.Ed,MA in Tamil,M.Sc(Health.Sc),PGD in Population Develop. PGD in Libr. and Inform. Sc |
பட்டமளிப்பு ஒளிப்படங்களுக்கான அறிவித்தல்

குறிப்பு:
- பட்டமளிப்பு அங்கிகள் வழங்கப்படும் தினத்திலன்று பட்டதாரிமாணவர்கள் நேரடியாக சமூமளித்து கல்விக்கிளையினால் வழங்கப்படும் கேள்விக் கொத்தினை முறையாகப் பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- வவுனியா வளாக மாணவர்கள் 06.01.2017ஆம் திகதியிலிருந்து பட்டமளிப்பு அங்கிகளை வவுனியா வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விபரங்களை வவுனியா வளாக இணையத்தளத்தில் பார்வையிடலாம். முகவரி: www.vau.jfn.ac.lk
பதிவாளர்