நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான அனுமதி

மேற்படி கற்கைநெறிக்கான 28.04.2022 அன்று நடைபெற இருந்த பதிவுகள் யாவும் தவிர்க்க முடியாத காரணத்தால் நடைபெறமாட்டாது. 29.04.2022 அன்று மேற்படி கற்கை நெறிக்கான பதிவுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனுமதிகள் கிளையில் காலை 9.30 மணிமுதல் 12.00 மணிவரை மேற்கொள்ள முடியும் என்பதை அறியத் தருகின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு உதவிப்பதிவாளர்/அனுமதிகள் கிளையின் 021 222 6714 இன் மூலமாகவோ admissions@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தொடர்பு கொள்ளவும்.

பதிவாளர்
அனுமதிகள் கிளை
26.04.2022