பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கம் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

cropped-crest-uj-512-recovered

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கம்

A_Thurirajahபேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு தை மாதம் 2016 க்கு பின்னர் பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பில் அல்லது இரண்டாம் (மேற்பிரிவு) வகுப்பில் சித்தியெய்தி எதிர்வரும் பட்டமளிப்பு வைபவத்தில் இளமாணி பட்டம் அளிக்கப்படவிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப்படிவங்களை கீழ்காணும் முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

1. சிரேஸ்ட உதவிப் பதிவாளர், கல்விக்கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

2. சிரேஸ்ட உதவிப்பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து வவுனியாவளாகம், வவுனியா

3. www.jfn.ac.lk இணையத்தளம்

விருதுகள்:- பல்கலைக்கழக மட்டத்தில் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஒரு பதக்கமும், பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக பீடங்களுக்கு ஒவ்வொரு பதக்கமும் வழங்கப்படும்.

முடிவுத் திகதி: 25.11.2016

சரியான பொருத்தமான தகவல்களை உள்ளடக்காததும்; தெளிவற்றதும்; பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவுத் திகதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

பதிவாளர்