கேள்விப் பத்திரம் கோரல் – போட்டோ பிரதி சேவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் போட்டோ பிரதி சேவையை மேற்கொள்வதற்கான கேள்விப் பத்திரம் கோரல்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் போட்டோ பிரதி சேவையை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நடாத்துவதற்கு பொருத்தமான தனி நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்களின் தினசரி விரிவுரைக் குறிப்புகள், பல்கலைக்கழக நூலகத்திலுள்ள நிரந்தர உசாத்துணை நூல்கள் என்பவற்றை நிழற்பிரதி செய்வதற்கு இச்சேவையைப் பொறுப்பேற்பவர் தயாராக இருக்க வேண்டும்.
இச்சேவையைப் பொறுப்பேற்பவர் மாத வாடகையாக ரூபா 3,000/- இனை மாதாந்தம் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துவதுடன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுதல் வேண்டும்.
விரும்பிய விண்ணப்பதாரர் மீளளிக்கப்படாத கட்டணமாக ரூபா 1,000/- இனை  பல்கலைக்கழக காசாளர் கருமபீடத்தில் அல்லது நிதியாளர்இ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கியின் கணக்கிலக்கம் 970000060000276 இற்கு எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் செலுத்தி பெற்ற பற்றுச் சீட்டை 23.06.2023 மதியம் 12.00 மணிக்கு முன்னர் உதவிப்பதிவாளர், நிர்வாகம் அவர்களிடம் சமர்ப்பித்து கேள்விப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூரணப்படுத்தப்பட்ட கேள்விப்பத்திரப் படிவங்களை 28.06.2023 பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாகப் பதிவுத்தபாலில் தலைவர், கேள்விச்சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரடியாகச் சமர்ப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த காலவரையறைக்குள் பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் பத்திரங்களை இடலாம். கடித உறையின் இடது மேல் மூலையில் ‘பல்கலைக்கழக நூலகத்தில் போட்டோ பிரதி சேவை வழங்கல்’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் கேள்விப்பத்திர விபரம் மற்றும் நிபந்தனை விபரங்களை பொது நிர்வாகக் கிளையில் உதவிப்பதிவாளரிடம் தொடர்பு கொண்டு பார்வையிடலாம்.
கேள்விப்பத்திரங்கள் 28.06.2023 பிற்பகல் 2.30 மணிக்கு திறக்கப்படும். மனுதாரர்கள் அல்லது அவர்களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் இடத்திற்கு சமுகமளிக்கலாம்.

தலைவர்
கேள்விச்சபை
10.06.2023