வேண்டுகோள் படிவங்களைச் சமர்ப்பித்தல் – 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

English

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

14.03.2024, 15.03.2024 மற்றும் 15.03.2024

உயர்பட்டங்கள், பட்டங்கள், பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் ஆகியவற்றை தகுதியளிப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது   பொதுப் பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும்16.03.2024 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பின்வரும் தேர்வுகளில் சித்தியடைந்து 38 ஆவது  பொதுப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களை 09.01.2024 தொடக்கம் 26.02.2024 ஆம் திகதி காலை 9.00 மணி வரை தமது வேண்டுகோள்களை கீழ்வரும் அறிவுறுத்தல்களுக்கமைய சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.

 1. கலாநிதி
 2. முதுமெய்யியல்மாணி
 3. கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி
 4. பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணி
 5. தூய சக்தித் தொழிநுட்பங்களில் முதுமாணி
 6. சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி
 7. தமிழில் முதுமாணி
 8. முது வியாபார நிர்வாகமாணி
 9. கல்வியியலில் முதுமாணி – வவுனியா
 10. கல்வியியலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழ் – பகுதிநேரம் – வவுனியா
 11. சித்தவைத்திய சத்திரசிகிச்சைமாணி
 12. வைத்தியமாணி சத்திரசிகிச்சைமாணி
 13. வியாபார நிர்வாகமாணி சிறப்பு
 14. வியாபார நிர்வாகமாணி
 15. வணிகமாணி சிறப்பு
 16. வணிகமாணி
 17. விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி
 18. கலைமாணி சிறப்பு
 19. கலைமாணி (தேர்ந்தமை)
 20. மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணி
 21. பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணி
 22. உயிர்முறைமைகள் தொழில்நுட்பமாணி சிறப்பு
 23. பொறியியல் தொழில்நுட்பமாணி சிறப்பு
 24. தாதியியல் சிறப்பு விஞ்ஞானமாணி
 25. மருந்தகவியல் சிறப்புமாணி
 26. மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான சிறப்பு விஞ்ஞானமாணி
 27. வியாபார முகாமைத்துவமாணி
 28. 2செயற்றிட்ட முகாமைத்துவத்தில்  சிறப்பு வியாபார முகாமைத்துவமாணி
 29. செயற்றிட்ட முகாமைத்துவத்தில்  வியாபார முகாமைத்துவமாணி
 30. கணக்கியலும் நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணி
 31. சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணி
 32. வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாiமைத்துவமாணி
 33. மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணி
 34. பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி
 35. சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
 36. தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணி
 37. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமாணி சிறப்பு
 38. கலைமாணி (வெளிவாரி)

அறிவுறுத்தல்கள்:

வேண்டுகோள் படிவங்களைச் சமர்ப்பித்தல்

அனைத்து விண்ணப்பதாரிகளும் www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்தின் ஊடாக வேண்டுகோள் படிவத்தினை 19.01.2024 காலை 9.00 மணிக்கு முன்னர் நிகழ்நிலையாக நிரப்பி விண்ணப்பித்தல் வேண்டும். குறிப்பிட்ட செயல்முறையில் பின்வரும் ஆவணங்களைத் தரவேற்றம் செய்யும் போது ஒவ்வொரு ஆவணமும் 2MB இற்கு மேற்படாது  ‘jpeg’ அல்லது ‘jpg’ அல்லது ‘pdf ‘முறைவடிவில் இருத்தல் வேண்டும்.

நிகழ்நிலை வேண்டுகோள் படிவம்

நிகழ்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட வேண்டுகோள் படிவத்தினை தரவிறக்கம் செய்து கையொப்பமிட்டு மேற்கூறப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து பதிவுத்தபால் மூலம் கீழ்க்காணும் முகவரிக்கு 29.02.2024 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்புதல் வேண்டும். கடித உறையின் இடதுபக்க மூலையில் “38வது பட்டமளிப்பு விழா, (மாணவர் பதிவிலக்கம்:……….)”;  எனத் தங்களின் பதிவிலக்கத்தையும் குறிப்பிட்டு எழுதி அனுப்பவும்.

அஞ்சல் முகவரி

அனைத்து உள்வாரி விண்ணப்பதாரிகளும் கீழ்க் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.

உதவிப் பதிவாளர்/அனுமதிகள் கிளை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
இராமநாதன் வீதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

அனைத்து வெளிவாரி விண்ணப்பதாரிகளும் கீழ்க் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்

உதவிப் பதிவாளர்/ திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

கட்டணம் செலுத்தும் முறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  கணக்கிலக்கத்திற்குச் சேரக் கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வங்கிப் பற்றுச் சீட்டில் பெயரையும் மாணவர் பதிவு இலக்கத்தையும் தெளிவாகக் குறிப்பிடவும்.

கட்டணம் மற்றும் வங்கிக் கணக்கிலக்க விபரம்
கட்டணம் பட்டதாரிகள் பட்டப்பின் படிப்பு பட்டதாரிகள் வெளிவாரிப் பட்டதாரிகள்
பட்டமளிப்பு விழாக்கட்டணம் 4,100.00 4,500.00 4,100.00
பட்ட மேலங்கிக் கட்டணம் 1,100.00 1,400.00 1,100.00
பட்டச்சான்றிதழ்க் கட்டணம் 1,600.00 1,900.00 1,600.00
புகைப்படக் கட்டணம் 1,200.00 1,200.00 1,200.00
மொத்தக் கட்டணம் 8,000.00 9,000.00 8,000.00
மக்கள் வங்கி கணக்கிலக்கம் (குறிப்பிலக்கம்)
நேரில் சமுகமளிப்பவர் 970000052100308 970000082100310  890002460001794
சமுமளிக்காதவர் 970000052100340 970000082100351 890002460003311

பட்டமளிப்பிற்கு நேரில் சமுகமளிப்போரோ சமுகமளிக்காதோரோ பொருத்தமான முறையில் மேலே குறிப்பிட்டவாறு தங்கள் பட்டங்களிற்கு ஏற்றவாறு பொருத்தமான குறிப்பிலக்கத்தை வங்கிப் பற்றுச் சீட்டில் குறிப்பிடவும்.  மேற் குறிப்பிட்டபடி பொருத்தமான குறிப்பிலக்கம் குறிப்பிடப்படாத எந்த ஒரு பற்றுச்சீட்டும் வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதனைக் குறித்துக் கொள்க.

குறிப்பு: பட்டமளிப்பு விழாவிற்கு சமுகமளிக்காது பட்டச் சான்றிதழைப் பெற விரும்பும் பட்டதாரிகள் மேலங்கிக்கான கட்டணத்தையும் புகைப்படத்திற்கான கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

பட்டதாரி மேலங்கி

நேரடியாக சமுகமளித்து பட்டம் பெறுபவர்கள் அவர்களுக்கான பட்டதாரி மேலங்கிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின்  ஆவணக்காப்பகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். பட்டதாரி மேலங்கி விநியோகம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

பல்கலைக்கழக நிலுவைகள்

பல்கலைக்கழகத்திற்கு ஏதாவது நிலுவைகள் அல்லது கொடுப்பனவுகள் செலுத்தப்படாதிருந்தால் அவ் விண்ணப்பதாரிக்கு பட்டமளிப்புச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

மேலதிக தகவல்களுக்கு உள்வாரிப் பட்டதாரிகள் 021 222 6714 அல்லது admissions@univ.jfn.ac.lk  எனும் மின்னஞ்சல் மூலமும் , வெளிவாரிப் பட்டதாரிகள் 021 222 3612 அல்லது mdlcrd@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் மூலமும்; தொடர்பு கொள்ளவும்.

வேண்டுகோள் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்: 09.01.2024 இலிருந்து 26.02.2024 காலை 9.00 மணிவரை.

இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

பதிவாளர்